• Sep 20 2024

24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Tamil nila / Sep 2nd 2024, 8:06 pm
image

Advertisement

அடுத்த 24 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ளம் ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் குடா கங்கை உப குளம் பகுதிக்கு கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவல,  பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கை நிரம்பி வழிவதுடன், தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் உள்ள பக்க வீதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ளம் ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.களு கங்கையின் குடா கங்கை உப குளம் பகுதிக்கு கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவல,  பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கை நிரம்பி வழிவதுடன், தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதிகளில் உள்ள பக்க வீதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

Advertisement

Advertisement

Advertisement