• Dec 26 2024

துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை - அடுத்த ஆண்டு ஆரம்பம்

Tharun / May 14th 2024, 6:14 pm
image

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை அடுத்த ஆண்டு முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த டாக்ஸி சேவை செயல்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம்களுக்கு (சுமார் 30,000 இலங்கை நாணயம்) நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சேவையானது சாதாரண பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் எடுக்கும் தூரத்தை 10 நிமிடங்களில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த டாக்ஸி சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்றும் துபாய் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

நகரம் சுமார் 70% குறுகிய பயணங்களுக்கு 100 முதல் 500 மீட்டர் உயரத்திலும், நீண்ட பயணங்களுக்கு 1000 மீட்டர் உயரத்திலும் பறக்கும் டாக்ஸி சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் டாக்சிகளில் Luggage Packing செய்வதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை - அடுத்த ஆண்டு ஆரம்பம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை அடுத்த ஆண்டு முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த டாக்ஸி சேவை செயல்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம்களுக்கு (சுமார் 30,000 இலங்கை நாணயம்) நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சேவையானது சாதாரண பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் எடுக்கும் தூரத்தை 10 நிமிடங்களில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த டாக்ஸி சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்றும் துபாய் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.நகரம் சுமார் 70% குறுகிய பயணங்களுக்கு 100 முதல் 500 மீட்டர் உயரத்திலும், நீண்ட பயணங்களுக்கு 1000 மீட்டர் உயரத்திலும் பறக்கும் டாக்ஸி சேவை திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் டாக்சிகளில் Luggage Packing செய்வதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement