நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அரசியல் தொடர்பில் எதுவும் அங்கு பேசப்படவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்று (09) மாத்தறையில் தெரிவித்தார்.
“மக்கள் புரட்சி” எனும் கட்சி சார்பற்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நிதி அமைச்சு தொடர்பான விடயம் தொடர்பில் பேசுவதற்காகவே நான் ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன்.ஜனாதிபதியையும் இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையையும் சந்திக்க எனக்கு உரிமை உண்டு. அவர் நிதியமைச்சர். நான் அமைச்சுக்கு செல்லவில்லை. அவரை வெளியே சந்தித்தேன்.
பின்வாசலால் சென்று சந்திக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவரின் ஒழுக்காற்று விசாரணை உரையை கேட்டேன். எனது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எப்போதும் எது சரியோ அதையே முன்னிறுத்துபவர் நான். குடிமக்கள் விரும்புவதைக் கொண்டு கட்சியில் பணியாற்றுங்கள், நாட்டுக்கு நல்லது, கட்சிக்கு வெளியே சரியானவற்றிற்காக கட்சி சார்பற்ற உழைப்பை நான் வழங்குவேன்..” என அவர் மேலும் தெரிவித்தார்
ஜனாதிபதியை சந்தித்த காரணத்தை போட்டுடைத்த பொன்சேகா.samugammedia நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அரசியல் தொடர்பில் எதுவும் அங்கு பேசப்படவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்று (09) மாத்தறையில் தெரிவித்தார்.“மக்கள் புரட்சி” எனும் கட்சி சார்பற்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.“நிதி அமைச்சு தொடர்பான விடயம் தொடர்பில் பேசுவதற்காகவே நான் ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன்.ஜனாதிபதியையும் இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையையும் சந்திக்க எனக்கு உரிமை உண்டு. அவர் நிதியமைச்சர். நான் அமைச்சுக்கு செல்லவில்லை. அவரை வெளியே சந்தித்தேன்.பின்வாசலால் சென்று சந்திக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவரின் ஒழுக்காற்று விசாரணை உரையை கேட்டேன். எனது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எப்போதும் எது சரியோ அதையே முன்னிறுத்துபவர் நான். குடிமக்கள் விரும்புவதைக் கொண்டு கட்சியில் பணியாற்றுங்கள், நாட்டுக்கு நல்லது, கட்சிக்கு வெளியே சரியானவற்றிற்காக கட்சி சார்பற்ற உழைப்பை நான் வழங்குவேன்.” என அவர் மேலும் தெரிவித்தார்