• Apr 01 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டங்களை புறக்கணிக்கும் பொன்சேகா..?

Chithra / Feb 12th 2024, 2:02 pm
image

 

கட்சித் தலைமையுடன் கருத்து முரண்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கமுவ பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் மாநாட்டிற்கு சரத் பொன்சேகாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் அதனையும் தவறவிட்டுள்ளார்.

இதேவேளை, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மனக்கசப்புடன் செயற்படும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தெரிவித்துள்ளர்.

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு கீழே உள்ள ஏனைய உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பாரிய சிக்கலை எதிர்நோக்க நேரிடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டங்களை புறக்கணிக்கும் பொன்சேகா.  கட்சித் தலைமையுடன் கருத்து முரண்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கல்கமுவ பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் மாநாட்டிற்கு சரத் பொன்சேகாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் அதனையும் தவறவிட்டுள்ளார்.இதேவேளை, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மனக்கசப்புடன் செயற்படும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தெரிவித்துள்ளர்.கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு கீழே உள்ள ஏனைய உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பாரிய சிக்கலை எதிர்நோக்க நேரிடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement