ஐக்கிய மக்கள் சக்தியில் பிறகட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது இணைந்து வரும் நிலையில் கட்சியில் தற்போது இருப்பவர்களை ஓரம்கட்டவேண்டாமென இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதியவர்களுக்கு இடமளிக்கும் போது 2020 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி மாறி வந்தவர்கள் கட்சியின் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கட்சித் தலைவரைக் காட்டிலும் கட்சியின் சாதாரண உறுப்பினர்களுடன் பழக வேண்டும் என்பதால் இது அவசியம், என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்களான ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் தயாஷ்ரித திசேரா ஆகியோர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொன்சேகாவிற்கு ஏற்பட்ட அச்சம். ஓரம் கட்டவேண்டாமென எச்சரிக்கை ஐக்கிய மக்கள் சக்தியில் பிறகட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது இணைந்து வரும் நிலையில் கட்சியில் தற்போது இருப்பவர்களை ஓரம்கட்டவேண்டாமென இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புதியவர்களுக்கு இடமளிக்கும் போது 2020 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.கட்சி மாறி வந்தவர்கள் கட்சியின் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கட்சித் தலைவரைக் காட்டிலும் கட்சியின் சாதாரண உறுப்பினர்களுடன் பழக வேண்டும் என்பதால் இது அவசியம், என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்களான ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் தயாஷ்ரித திசேரா ஆகியோர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.