பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளை மிக விரைவாகவும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆட்சேர்ப்புப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் நேர்முகத் தேர்வுகளை நடத்தும் முறை மற்றும் முழுமையான ஆட்சேர்ப்புச் செயல்முறையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் தற்போது சமூகத்தில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே ஆசிரியர் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் தாமதமின்றி, முறையான நடைமுறைகளுக்கு அமையவும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அமைச்சின் மேலதிகச் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் – அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளை மிக விரைவாகவும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.குறிப்பாக, ஆட்சேர்ப்புப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் நேர்முகத் தேர்வுகளை நடத்தும் முறை மற்றும் முழுமையான ஆட்சேர்ப்புச் செயல்முறையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் தற்போது சமூகத்தில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே ஆசிரியர் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.மேலும், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் தாமதமின்றி, முறையான நடைமுறைகளுக்கு அமையவும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அமைச்சின் மேலதிகச் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.