• Oct 22 2026

இனிப்புகளுக்குள் மறைந்திருந்த மர்மம்; பொதிகளைத் திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Chithra / Oct 21st 2026, 3:52 pm
image

 


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு இளைஞர் ஒருவரின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.


தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இன்று (21) அதிகாலை 1.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு சிக்கியுள்ளார்.


விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, அவரது பயணப் பொதிகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.


இதன்போது ஆடைகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு மத்தியில் மூன்று பொதிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.


அவற்றைச் சோதனையிட்டபோதே முக்கிய விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


அந்தப் பொதிகளுக்குள் 4 கிலோ 646 கிராம் குஷ் ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன் பெறுமதி சுமார் 4 கோடியே 64 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிப்புகளுக்குள் மறைந்திருந்த மர்மம்; பொதிகளைத் திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு இளைஞர் ஒருவரின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இன்று (21) அதிகாலை 1.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு சிக்கியுள்ளார்.விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, அவரது பயணப் பொதிகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.இதன்போது ஆடைகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு மத்தியில் மூன்று பொதிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.அவற்றைச் சோதனையிட்டபோதே முக்கிய விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அந்தப் பொதிகளுக்குள் 4 கிலோ 646 கிராம் குஷ் ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் பெறுமதி சுமார் 4 கோடியே 64 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.அதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement