• Oct 22 2026

5 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு? இன்றும் இருளில் மூழ்கும் இலங்கை! அதிர்ச்சியில் மக்கள்

Chithra / Oct 21st 2026, 9:57 am
image


நாட்டில் நிலவும் மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நான்கு வலயங்களில் இன்றைய தினமும் (21) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதன்படி, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில், ஒவ்வொரு வலயத்திலும் தலா ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.


தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் முன்வைத்த மின்வெட்டு யோசனைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 19ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.


இருப்பினும், வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இடங்களுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.


கடந்த சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் தற்போது செயல்பாட்டில் இல்லை.


இதற்கமைய, மின்சார விநியோகத்தைச் சீர்செய்யும் நோக்கில், தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நாட்டின் சில பகுதிகளில் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார நுகர்வோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.


மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, மின்சார நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


5 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு இன்றும் இருளில் மூழ்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள் நாட்டில் நிலவும் மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நான்கு வலயங்களில் இன்றைய தினமும் (21) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில், ஒவ்வொரு வலயத்திலும் தலா ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் முன்வைத்த மின்வெட்டு யோசனைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 19ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.இருப்பினும், வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இடங்களுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.கடந்த சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் தற்போது செயல்பாட்டில் இல்லை.இதற்கமைய, மின்சார விநியோகத்தைச் சீர்செய்யும் நோக்கில், தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை, ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நாட்டின் சில பகுதிகளில் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார நுகர்வோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, மின்சார நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement