மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொத்மலை நீர்த்தேக்கத்துடன் சங்கமிக்கும் ஆக்ராஓயா ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரித்ததால், லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் ஆற்றங்கரையை அண்மித்துள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதேவேளை, அம்பேவெல பகுதியில் பெய்த தொடர்ச்சியான மழையால் அம்பேவெல ரயில் நிலையப் பகுதியும், அதனை அண்மித்துள்ள நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி அசேந்திர திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையால் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளது.
இதன் காரணமாக இன்று புதன்கிழமை (21) காலை முதல் நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வான் மேவி பாய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, களனி ஆறு மற்றும் கேசல்கமு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் சற்றளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.நுவரெலியா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) பெய்த கனமழையால் அம்பேவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் பிற்பகலில் திறக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து, கொத்மலை நீர்த்தேக்கத்துடன் சங்கமிக்கும் ஆக்ராஓயா ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரித்ததால், லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் ஆற்றங்கரையை அண்மித்துள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.இதேவேளை, அம்பேவெல பகுதியில் பெய்த தொடர்ச்சியான மழையால் அம்பேவெல ரயில் நிலையப் பகுதியும், அதனை அண்மித்துள்ள நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால், குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி அசேந்திர திசநாயக்க தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையால் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளது.இதன் காரணமாக இன்று புதன்கிழமை (21) காலை முதல் நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வான் மேவி பாய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, களனி ஆறு மற்றும் கேசல்கமு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் சற்றளவு உயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நிலையில், களனி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.