கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
அம்பலாங்கொடை - கரித்த கந்த பகுதியில் நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கட்டடம் ஒன்றின் அத்திவாரத்திற்கான குழிகளைத் தோண்டும் பணியில் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், அருகிலிருந்த மண்மேடு திடீரெனச் சரிந்து வீழ்ந்ததில் மூவர் சிக்கியுள்ளனர்.
இதன்போது இருவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மற்றுமொருவர் முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பின்னர் மண்ணுக்குள் புதையுண்ட நபர் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை, ஓகந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய பிரபாத் சந்திர குணதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, மீண்டும் மண்மேடு ஒன்று திடீரெனச் சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, சரிந்த மண்மேடு அங்கிருந்த இரும்புக் கம்பிகள் மீது வீழ்ந்ததில், விபத்தைப் பார்வையிட வந்திருந்த நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
கட்டட நிர்மாணப் பணிகளின்போது இடம்பெற்ற இந்த அனர்த்தம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மண்ணுக்குள் புதையுண்ட தொழிலாளர்கள் - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.அம்பலாங்கொடை - கரித்த கந்த பகுதியில் நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கட்டடம் ஒன்றின் அத்திவாரத்திற்கான குழிகளைத் தோண்டும் பணியில் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், அருகிலிருந்த மண்மேடு திடீரெனச் சரிந்து வீழ்ந்ததில் மூவர் சிக்கியுள்ளனர்.இதன்போது இருவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மற்றுமொருவர் முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளார்.இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பின்னர் மண்ணுக்குள் புதையுண்ட நபர் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அம்பலாங்கொடை, ஓகந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய பிரபாத் சந்திர குணதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதேவேளை, சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, மீண்டும் மண்மேடு ஒன்று திடீரெனச் சரிந்து வீழ்ந்துள்ளது.இதன்போது, சரிந்த மண்மேடு அங்கிருந்த இரும்புக் கம்பிகள் மீது வீழ்ந்ததில், விபத்தைப் பார்வையிட வந்திருந்த நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.கட்டட நிர்மாணப் பணிகளின்போது இடம்பெற்ற இந்த அனர்த்தம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.