கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில், கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பௌத்த பிக்குகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதியில், கூரிய ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரிடமிருந்து இரண்டு கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், போராட்டம் நடைபெறும் பகுதிக்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? அவரிடம் கூரிய ஆயுதங்கள் இருந்ததற்கான காரணம் என்ன? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அவர் அங்கு வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பவத்தின் பின்னணி குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஞானசாரருக்காக போராடும் தேரர்களை கொல்ல திட்டமா கொழும்பில் பரபரப்பு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில், கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பௌத்த பிக்குகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதியில், கூரிய ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரிடமிருந்து இரண்டு கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறான பின்னணியில், போராட்டம் நடைபெறும் பகுதிக்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நபர் எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார் அவரிடம் கூரிய ஆயுதங்கள் இருந்ததற்கான காரணம் என்ன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அவர் அங்கு வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பவத்தின் பின்னணி குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.