யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இணுவில் காங்கேசன்துறை வீதியில், கோவில் வாசலுக்கு அருகில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த முதியவரின் அடையாளம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் அதிகாலையில் துயரம்; சைக்கிளில் சென்றவருக்கு அதிர்ச்சி யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இணுவில் காங்கேசன்துறை வீதியில், கோவில் வாசலுக்கு அருகில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.டிப்பர் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த முதியவரின் அடையாளம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.