• Dec 19 2024

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய : மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம்

Tharmini / Dec 19th 2024, 5:07 pm
image

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 மக்களுடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு. இதில் 35 சிறுவர்கள், ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்கியுள்ளனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள்  பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் அறியத்தந்துள்ளனர்.

இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய : மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 மக்களுடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு. இதில் 35 சிறுவர்கள், ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்கியுள்ளனர்.குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள்  பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் அறியத்தந்துள்ளனர்.இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement