• Aug 23 2026

வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!

Chithra / Aug 22nd 2026, 10:26 am
image


இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

 

சுமார் 252 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான், இலங்கை அன்னாசிப் பழங்களுக்கு அதிக வாய்ப்புள்ள சந்தையாகக் கருதப்படுகிறது. 


பாகிஸ்தான் ஆண்டுதோறும் சுமார் 2,000 முதல் 5,000 மெட்ரிக் தொன் வரையான அன்னாசிப் பழங்களை இறக்குமதி செய்வதுடன், அதன் பெறுமதி சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.


தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தற்போது பாகிஸ்தானுக்கு அன்னாசிப் பழங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக உள்ளன. 


இலங்கை அன்னாசிப் பழங்களின் தரம், புத்துணர்ச்சி, தனித்துவமான சுவை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் ஆகிய காரணங்களால், பாகிஸ்தான் சந்தையில் இலங்கைக்கு அதிக பங்கைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து அன்னாசிப் பழங்களும் நல்ல விவசாய நடைமுறைகள் (GAP) சான்றிதழ் பெற்ற பண்ணைகளிலிருந்து பெறப்பட வேண்டும் என்பதுடன், சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள் இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுமார் 252 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான், இலங்கை அன்னாசிப் பழங்களுக்கு அதிக வாய்ப்புள்ள சந்தையாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் ஆண்டுதோறும் சுமார் 2,000 முதல் 5,000 மெட்ரிக் தொன் வரையான அன்னாசிப் பழங்களை இறக்குமதி செய்வதுடன், அதன் பெறுமதி சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தற்போது பாகிஸ்தானுக்கு அன்னாசிப் பழங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக உள்ளன. இலங்கை அன்னாசிப் பழங்களின் தரம், புத்துணர்ச்சி, தனித்துவமான சுவை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் ஆகிய காரணங்களால், பாகிஸ்தான் சந்தையில் இலங்கைக்கு அதிக பங்கைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து அன்னாசிப் பழங்களும் நல்ல விவசாய நடைமுறைகள் (GAP) சான்றிதழ் பெற்ற பண்ணைகளிலிருந்து பெறப்பட வேண்டும் என்பதுடன், சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement