• Nov 26 2024

33 வருட பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன்...!samugammedia

Anaath / Dec 16th 2023, 12:41 pm
image

33 வருடகால வரலாற்றில் முதற்தடவையாக 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தோப்பூர் தி/மூ/ சிராஜ்நகர் வித்தியாலய மாணவன் அஸாம் முஹமட் பர்ஹான் என்ற மாணவனை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் ஏ.சி.அமினிதீன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இவ் வரலாற்று நிகழ்வினை பாடசாலை சமூகத்தினர், கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஏனைய ஐந்து மாணவர்களும் இவர்களுக்காக கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்ட ஆர்.ரோசன் ஆசிரியர் அவர்களும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான சுப்பிரமணியம்,எம்.பீ.ஹாஜா முகைதீன், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.டத்தக்கது.

33 வருட பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன்.samugammedia 33 வருடகால வரலாற்றில் முதற்தடவையாக 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தோப்பூர் தி/மூ/ சிராஜ்நகர் வித்தியாலய மாணவன் அஸாம் முஹமட் பர்ஹான் என்ற மாணவனை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் ஏ.சி.அமினிதீன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.இவ் வரலாற்று நிகழ்வினை பாடசாலை சமூகத்தினர், கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஏனைய ஐந்து மாணவர்களும் இவர்களுக்காக கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்ட ஆர்.ரோசன் ஆசிரியர் அவர்களும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் கலந்து சிறப்பித்தார்.ஏனைய அதிதிகளாக மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான சுப்பிரமணியம்,எம்.பீ.ஹாஜா முகைதீன், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement