நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ச குடும்பத்திடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
ராஜபக்ச குடுப்பத்தினர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் குறைந்த வரி வீதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஸவிடமிருந்து இழந்த சொத்துக்களை மீட்க வேண்டும் - சந்திரிக்கா ஆலோசனை .samugammedia நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ச குடும்பத்திடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.ராஜபக்ச குடுப்பத்தினர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் குறைந்த வரி வீதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.