• Aug 09 2025

மனிதபுதைகுழி உள்ளிட்ட தமிழர்களின் பிரச்சினைகள்; எதிர்வரும் 22 இல் நாடாளுமன்றில் விவாதம்!

shanuja / Aug 9th 2025, 4:49 pm
image


தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல்லதீர்வு உள்ளிட்ட விடயங்கள் பேசுவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது என்று 

சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். 


கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே  இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


கடந்த மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நிலஅபகரிப்பு, மனித  புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தேன். 


அதற்காக சந்தர்ப்பம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது.  குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை,  காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம். 


தொடர்ந்து  மன்னார் காற்றாலை  கோபுரம்  மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு நேற்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளேன். - என்று மேலும் தெரிவித்தார்.

மனிதபுதைகுழி உள்ளிட்ட தமிழர்களின் பிரச்சினைகள்; எதிர்வரும் 22 இல் நாடாளுமன்றில் விவாதம் தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல்லதீர்வு உள்ளிட்ட விடயங்கள் பேசுவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது என்று சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே  இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நிலஅபகரிப்பு, மனித  புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதற்காக சந்தர்ப்பம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது.  குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை,  காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம். தொடர்ந்து  மன்னார் காற்றாலை  கோபுரம்  மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு நேற்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளேன். - என்று மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement