வவுனியா நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுச்சுவரை இடிக்குமாறு தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையுடன் ஆலய வளாகமும் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் , பேருந்து தரிப்பிடம் , முச்சக்கரவண்டிகள் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ள பகுதியிலேயே குறித்த பிள்ளையார் ஆலய வளாகம் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுமாறு தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் குறித்த ஆலய வளாகத்தினை அகற்றுமாறும் இல்லாவிடில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முறைப்பாட்டிற்கமைய நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்படும் என ஆலய நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அச்சத்தினால் ஆலய நிர்வாகத்தினால் ஆலய வளாகம் இடித்தழிக்கப்பட்டது.
நகரில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் பல மதஸ்தலங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லையினுள் பாரிய கட்டிடங்களை அமைத்துள்ளமையுடன் வாடிகாலையும் ஆக்கிரமித்துள்ளனர்.
இருப்பினும் அவற்றினை அகற்றுவதில் அக்கறை செலுத்தாத வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இவ் பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுவது இந்து சமய மக்களின் மத்தியில் பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையார் ஆலய சுற்றுச்சுவரை இடிக்குமாறு முறைப்பாடு; பொலிஸாரின் அச்சுறுத்தலில் இடித்தழித்த நிர்வாகம் வவுனியா நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுச்சுவரை இடிக்குமாறு தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையுடன் ஆலய வளாகமும் இடித்தழிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் , பேருந்து தரிப்பிடம் , முச்சக்கரவண்டிகள் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ள பகுதியிலேயே குறித்த பிள்ளையார் ஆலய வளாகம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுமாறு தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் குறித்த ஆலய வளாகத்தினை அகற்றுமாறும் இல்லாவிடில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முறைப்பாட்டிற்கமைய நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்படும் என ஆலய நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனால் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அச்சத்தினால் ஆலய நிர்வாகத்தினால் ஆலய வளாகம் இடித்தழிக்கப்பட்டது.நகரில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் பல மதஸ்தலங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லையினுள் பாரிய கட்டிடங்களை அமைத்துள்ளமையுடன் வாடிகாலையும் ஆக்கிரமித்துள்ளனர். இருப்பினும் அவற்றினை அகற்றுவதில் அக்கறை செலுத்தாத வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இவ் பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுவது இந்து சமய மக்களின் மத்தியில் பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.