• Aug 08 2025

திருகோணமலையில் ஆணொருவனின் சடலம் மீட்பு!

shanuja / Aug 8th 2025, 5:37 pm
image

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் 05 ஆம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது.


சடலம் யாருடையது என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலம் இனங்காண முடியாத நிலையில்  உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் நாளை உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 


உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் யாருடையது என அடையாளம் காணப்படலாம் என்று தெரிவித்த குச்சவெளி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் ஆணொருவனின் சடலம் மீட்பு திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் 05 ஆம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது.சடலம் யாருடையது என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலம் இனங்காண முடியாத நிலையில்  உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் நாளை உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் யாருடையது என அடையாளம் காணப்படலாம் என்று தெரிவித்த குச்சவெளி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement