வவுனியாவில் தாண்டிக்குளம் கொல்களன் மூடு , கோ மாதா இந்து புத்த குல மாதா , தாண்டிக்குளம் கொல்களன் இந்த புத்த அறங்களின் கொல்களன் போன்ற வசனங்களை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளின் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடுத்தொழுவத்தில் அதிகளவில் மாடுகள் வெட்டப்படுகின்றமை மற்றும் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதாக மாநகரசபை சுகாதாரக் குழு நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையிலையிலேயே சிவசேனை அமைப்பு என உரிமை கோரி இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா மாநகரசபை வீதி , பூங்கா வீதி , மன்னார் வீதி , ஏ9 வீதி என வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையுடன் சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் சிவசேனை என உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 04.08.2025 அன்று கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 558.5கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தாண்டிக்குளம் கொல்களணை மூடு - நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் வவுனியாவில் தாண்டிக்குளம் கொல்களன் மூடு , கோ மாதா இந்து புத்த குல மாதா , தாண்டிக்குளம் கொல்களன் இந்த புத்த அறங்களின் கொல்களன் போன்ற வசனங்களை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளின் ஒட்டப்பட்டுள்ளன.வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடுத்தொழுவத்தில் அதிகளவில் மாடுகள் வெட்டப்படுகின்றமை மற்றும் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதாக மாநகரசபை சுகாதாரக் குழு நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையிலையிலேயே சிவசேனை அமைப்பு என உரிமை கோரி இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.வவுனியா மாநகரசபை வீதி , பூங்கா வீதி , மன்னார் வீதி , ஏ9 வீதி என வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையுடன் சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் சிவசேனை என உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த 04.08.2025 அன்று கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 558.5கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.