பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர் இன்று (08) ஈடுபடுத்தப்பட்டது.
விரைவாகச் செயற்பட்ட விமானப்படை, வானிலிருந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு பெல் 412 ரக ஹெலிகொப்டரை பம்பி பக்கெட் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பியுள்ளது.
வனப்பகுதி முழுவதும் தீ மேலும் பரவாமல் தடுக்கும் முதன்மை நோக்கத்துடன் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் உள்ளூர் அவசர சேவைகளின் ஒருங்கிணைப்புடன் தீயை அணைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளன.
காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர் அனுப்பிவைப்பு பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர் இன்று (08) ஈடுபடுத்தப்பட்டது.விரைவாகச் செயற்பட்ட விமானப்படை, வானிலிருந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு பெல் 412 ரக ஹெலிகொப்டரை பம்பி பக்கெட் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பியுள்ளது.வனப்பகுதி முழுவதும் தீ மேலும் பரவாமல் தடுக்கும் முதன்மை நோக்கத்துடன் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் உள்ளூர் அவசர சேவைகளின் ஒருங்கிணைப்புடன் தீயை அணைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளன.