வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வானது இன்று (8) நடைபெற்றது.
பாடசாலைக்குள் ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் நோக்கில் சிவலிங்கம் ஒன்றிற்கான கோரிக்கையை பாடசாலையின் இந்துமாமன்றத்தினர் முன்வைத்ததற்கு அமைய சிவபூமி அறக்கட்டளையினரால் சிவலிங்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கான கட்டடத்தை அமைப்பதற்கான நிதியினை தென்னாடு சைவமகா சபையினர் வழங்கினர். அந்தவகையில் தமிழ் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்து, பூஜை வழிபாடுகளின் பின்னர் சிவலிங்கத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
பாடசாலையின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்துமாமன்ற பொறுப்பாசிரியர் யோ.கேதீஸன், வலயத்தின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், தென்னாடு சைவமகா சபையின் பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டினர்.
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் சிவலிங்க பிரதிஷ்டைக்கு அடிக்கல் நடுகை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வானது இன்று (8) நடைபெற்றது.பாடசாலைக்குள் ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் நோக்கில் சிவலிங்கம் ஒன்றிற்கான கோரிக்கையை பாடசாலையின் இந்துமாமன்றத்தினர் முன்வைத்ததற்கு அமைய சிவபூமி அறக்கட்டளையினரால் சிவலிங்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இந்த நிலையில் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கான கட்டடத்தை அமைப்பதற்கான நிதியினை தென்னாடு சைவமகா சபையினர் வழங்கினர். அந்தவகையில் தமிழ் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்து, பூஜை வழிபாடுகளின் பின்னர் சிவலிங்கத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.பாடசாலையின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்துமாமன்ற பொறுப்பாசிரியர் யோ.கேதீஸன், வலயத்தின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், தென்னாடு சைவமகா சபையின் பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டினர்.