• Aug 08 2025

அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை; 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்

Chithra / Aug 8th 2025, 11:50 am
image


அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

 பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. 

சில அரச துறைகளுக்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், 

இதன் விளைவாக அதிகாரிகள்,  களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். 

பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை; 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம் அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. சில அரச துறைகளுக்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள்,  களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement