புறப்பட தயாராகவிருந்த விமானத்தின் கழிப்பறைக்குள் பயணி ஒருவர் புகைப்பிடித்த (e-cigarette) சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் அலிகாண்டே நகருக்கு செல்லவிருந்த ரியான்ஏர் (Ryanair) விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணி ஒருவர் ரகசியமாக (e-cigarette) புகைப் பிடித்ததையறிந்த விமான ஊழியர்கள் அவரை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளனர்.
விமானத்தில் புகைப்பிடித்த (e-cigarette) சம்பவம் விமானத்திலிருந்த பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் விமானம் புறப்படுவதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
விமான ஊழியர்களின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, குறித்த பயணி இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனையடுத்து மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதி, புகைப்பிடித்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் தீர்மானித்தனர்.
விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்தப் பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
புகைப்பிடித்த பயணி வெளியேற்றப்பட்டு சுமார் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் புறப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் வேப்பிங் செய்வது அல்லது புகைப்பிடிப்பது கடுமையான குற்றம். இது விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனபது குறிப்பிடத்தக்கது.
கழிப்பறையில் புகைப்பிடிப்பு விமானத்தில் பரபரப்பு; பயணியை வெளியேற்றி 2 மணி நேரத்தின் பின் பயணம் புறப்பட தயாராகவிருந்த விமானத்தின் கழிப்பறைக்குள் பயணி ஒருவர் புகைப்பிடித்த (e-cigarette) சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் அலிகாண்டே நகருக்கு செல்லவிருந்த ரியான்ஏர் (Ryanair) விமானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புறப்பட தயாரான ரியான்ஏர் விமானத்தில் இருந்த பயணி ஒருவர், விமானத்தின் கழிப்பறையில் ரகசியமாக (e-cigarette) புகைப் பிடித்துள்ளார். பயணி ஒருவர் ரகசியமாக (e-cigarette) புகைப் பிடித்ததையறிந்த விமான ஊழியர்கள் அவரை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளனர். விமானத்தில் புகைப்பிடித்த (e-cigarette) சம்பவம் விமானத்திலிருந்த பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விமானம் புறப்படுவதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.விமான ஊழியர்களின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, குறித்த பயணி இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதி, புகைப்பிடித்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் தீர்மானித்தனர். விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்தப் பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.புகைப்பிடித்த பயணி வெளியேற்றப்பட்டு சுமார் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் புறப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் வேப்பிங் செய்வது அல்லது புகைப்பிடிப்பது கடுமையான குற்றம். இது விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனபது குறிப்பிடத்தக்கது.