பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை திருத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் மறைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தீர்க்கப்படாத கொலைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" .
GSP+ வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மறைக்கப்பட்ட குற்றங்கள், தீர்க்கப்படாத கொலைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் - அநுர வெளிப்படை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை திருத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் மறைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தீர்க்கப்படாத கொலைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" .GSP+ வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளது. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் மேலும் தெரிவித்தார்.