• Aug 07 2025

இன்று முதல் அமுலுக்கு வருகிறது அமெரிக்காவின் வரி விதிப்பு

Chithra / Aug 7th 2025, 11:38 am
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமலுக்கு வருகின்றன. 

அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரியை அறவிடவுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வரியை விதிக்க முடிவு செய்தார்.  

இலங்கை மீது முதலில் 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.  

அத்தகைய சூழலில் இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது.  

அதற்கமைய இலங்கைக்கு 20 சதவீதமாக வரி அறவிடுவதாக அமெரிக்கா அறிவித்தது.  

இதற்கிடையில், அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 


இன்று முதல் அமுலுக்கு வருகிறது அமெரிக்காவின் வரி விதிப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரியை அறவிடவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வரியை விதிக்க முடிவு செய்தார்.  இலங்கை மீது முதலில் 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.  அத்தகைய சூழலில் இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது.  அதற்கமைய இலங்கைக்கு 20 சதவீதமாக வரி அறவிடுவதாக அமெரிக்கா அறிவித்தது.  இதற்கிடையில், அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement