• Aug 07 2025

நுவரெலியாவில் கன மழை; நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

Chithra / Aug 7th 2025, 12:43 pm
image


மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக லக்சபான, பொல்பிட்டிய, நவ லக்சபான, கலுகல, காசல்ரீ, மவுசாகல, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய வண்ணம் உள்ளது.

மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 5 அடி மட்டுமே நிரம்ப வேண்டி உள்ளது.

அதே போல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 3 அடி நீர் நிரம்ப வேண்டி உள்ளது. ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய வண்ணம் உள்ளது.

மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் இந்த இரண்டு நீர் தேக்கங்களின் வான் கதவுகள் தானாகவே திறந்து நீர் வெளியேறும்.

தற்போது இப் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சகல நீர் மின் நிலையங்களும் நீர் மின் உற்பத்தியை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நுவரெலியாவில் கன மழை; நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக லக்சபான, பொல்பிட்டிய, நவ லக்சபான, கலுகல, காசல்ரீ, மவுசாகல, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய வண்ணம் உள்ளது.மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 5 அடி மட்டுமே நிரம்ப வேண்டி உள்ளது.அதே போல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 3 அடி நீர் நிரம்ப வேண்டி உள்ளது. ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டிய வண்ணம் உள்ளது.மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அதன் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் இந்த இரண்டு நீர் தேக்கங்களின் வான் கதவுகள் தானாகவே திறந்து நீர் வெளியேறும்.தற்போது இப் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் சகல நீர் மின் நிலையங்களும் நீர் மின் உற்பத்தியை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement