மஸ்கொலியாப் பகுதியில் நேற்று முதல் மீனவர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து (வயது- 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மீனவர் நேற்றுக் காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறி சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
முறைப்பாட்டையடுத்து மஸ்கெலியா பொலிஸார், மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து குறித்த மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ கரையோர பகுதியில் குறித்த மீனவர் உடுத்தியிருந்த உடை, பாதணி என்பன இருப்பதை அவதானித்தனர்.
அதனையடுத்து மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் குறித்த மீனவரை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் தற்போது வரை மீனவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மஸ்கொலியாவில் மீனவர் மாயம்; ஆடை, பாதணிகள் கடற்கரையில் மீட்பு மஸ்கொலியாப் பகுதியில் நேற்று முதல் மீனவர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து (வயது- 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த மீனவர் நேற்றுக் காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறி சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளார்.முறைப்பாட்டையடுத்து மஸ்கெலியா பொலிஸார், மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து குறித்த மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ கரையோர பகுதியில் குறித்த மீனவர் உடுத்தியிருந்த உடை, பாதணி என்பன இருப்பதை அவதானித்தனர்.அதனையடுத்து மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் குறித்த மீனவரை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தற்போது வரை மீனவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.