• Aug 07 2025

புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்திப்படுத்துவது எமது நோக்கமல்ல - அநுர விளக்கம்

Chithra / Aug 7th 2025, 3:34 pm
image

 


தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  அவரை கைது செய்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த அரசாங்கம் செயற்படுவதாக கூறுகின்றார்கள்.

நாங்கள் திருப்திப்படுத்துவது நமது நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களையே. அதுவே எங்களது கடமை.

தற்போது நீதி சரியாக செயற்படுகிறது. நியாயமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. என்றார்.

புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்திப்படுத்துவது எமது நோக்கமல்ல - அநுர விளக்கம்  தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.விசாரணைகளுக்கு அமைய அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  அவரை கைது செய்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த அரசாங்கம் செயற்படுவதாக கூறுகின்றார்கள்.நாங்கள் திருப்திப்படுத்துவது நமது நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களையே. அதுவே எங்களது கடமை.தற்போது நீதி சரியாக செயற்படுகிறது. நியாயமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement