கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உயிர்காப்பபுப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்
தலுபொத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எத்துகால பகுதியில் நேற்று(6) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எத்துகால கடலில் நீராடச் சென்ற இளைஞர் கடல் அலையில் சிக்கியுள்ளார். அதனை அவதானித்த உயிர்காப்புப் படையினர் கடற்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அதனையடுத்து குறித்த இளைஞர் உயிர்காப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரையை வந்தடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நபர்; உயிர்காப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்பு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உயிர்காப்பபுப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்தலுபொத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எத்துகால பகுதியில் நேற்று(6) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எத்துகால கடலில் நீராடச் சென்ற இளைஞர் கடல் அலையில் சிக்கியுள்ளார். அதனை அவதானித்த உயிர்காப்புப் படையினர் கடற்பகுதிக்கு விரைந்து சென்றனர். அதனையடுத்து குறித்த இளைஞர் உயிர்காப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரையை வந்தடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.