யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாக்கு பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான இலங்கைத்தீவில் மே, யூன், யூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் அதிகளவு வருவது வழமை.
இலங்கை தீவில் இயற்கை அமைவிடம், வரலாற்று இடங்கள், போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் என்பவற்றை பார்வையிட்டு தமது விடுமுறை காலத்தை மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.
அவ்வாறே வடக்கு மாகாணத்தில் தற்பொழுது கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாளையடி கடற்கரையானது இயற்கை அழகுடன் அமைதியான தோற்றத்தில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தன் வசப்படுத்தி வருகின்றது.
எனினும் தாளையடி கடற்கரையில் சுற்றுலா வாசிகள் தமது விடுமுறை காலங்களை கழிப்பதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடற்கரையில் பொதுவான மலசலகூடம் இன்மை, தங்கும் விடுதிகள் இன்மை, பயணிகளை கவரும் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் இன்மை போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.
இதேவேளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் போதைப் பொருட்களை கடற்கரையில் பாவித்தபின் அதன் போத்தல்கள் தகரங்களை அவ்விடத்தில் வீசுவதால் சூழலின் அழகு பாதிக்கப்படுவதுடன் சூழல் மாசடைகின்றது.
எனவே தாளையடி கடற்கரையை அபிவிருத்தி செய்து சுற்றுலா வாசிகளின் சுகாதாரத்திற்கும் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றவகையில் மாற்றியமைக்க வழி வகுக்க வேண்டும்.
அவ்வாறு தாளையடி கடற்கரை அனைத்து வசதிகளுடன் காணப்பட்ட இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதந்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாளையடி கடற்கரை; அத்தியாவசிய தேவைகள் இல்லாமையாலே சிரமம் யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாக்கு பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான இலங்கைத்தீவில் மே, யூன், யூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் அதிகளவு வருவது வழமை. இலங்கை தீவில் இயற்கை அமைவிடம், வரலாற்று இடங்கள், போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் என்பவற்றை பார்வையிட்டு தமது விடுமுறை காலத்தை மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர். அவ்வாறே வடக்கு மாகாணத்தில் தற்பொழுது கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாளையடி கடற்கரையானது இயற்கை அழகுடன் அமைதியான தோற்றத்தில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தன் வசப்படுத்தி வருகின்றது. எனினும் தாளையடி கடற்கரையில் சுற்றுலா வாசிகள் தமது விடுமுறை காலங்களை கழிப்பதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கடற்கரையில் பொதுவான மலசலகூடம் இன்மை, தங்கும் விடுதிகள் இன்மை, பயணிகளை கவரும் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் இன்மை போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.இதேவேளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் போதைப் பொருட்களை கடற்கரையில் பாவித்தபின் அதன் போத்தல்கள் தகரங்களை அவ்விடத்தில் வீசுவதால் சூழலின் அழகு பாதிக்கப்படுவதுடன் சூழல் மாசடைகின்றது. எனவே தாளையடி கடற்கரையை அபிவிருத்தி செய்து சுற்றுலா வாசிகளின் சுகாதாரத்திற்கும் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றவகையில் மாற்றியமைக்க வழி வகுக்க வேண்டும். அவ்வாறு தாளையடி கடற்கரை அனைத்து வசதிகளுடன் காணப்பட்ட இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதந்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.