• Aug 07 2025

ஈழத்து கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் நவவிழா கொண்டாட்டம்!

shanuja / Aug 7th 2025, 10:08 am
image

கலாபூஷணம் சோக்கல்லோ சண்முகநாதனின் நவவிழா கடந்த முதலாம் திகதி கனடாவில்  இடம்பெற்றது. கனடாவில் உள்ள ஏழாலை நலன்விரும்பிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 


நிகழ்வின் ஆரம்பத்தில் கலாபூஷணம் சொக்கல்லோ சண்முகம் குடை பிடிக்கப்பட்டு கொடிச்சீலைகள் உள்ளிட்டவற்றுடன் பக்திபூர்வமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டார். 


அதன்பின்னர் அவருக்கு வாழ்த்துரையும் வரவேற்புரையும் ஏற்பாட்டுக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்களும் நலன்விரும்பிகளும் அவரைப் பாராட்டி கவிதைத் தொகுப்புக்களை வழங்கினர். 


நிகழ்வின் இடையில் அவரை வாழ்த்தும் முகமாக இசை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இறுதியாக அவரது வெற்றிகளை வாழ்த்தி வாழ்த்துமடல்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.




யாழ்ப்பாணம் ஏழாலையை பிறப்பிடமாகக் கொண்ட சோக்கல்லோ சண்முகநாதன் மேடை நாடகம், வில்லுப்பாட்டு என பல்துறை கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். “சோக்கல்லோ" என்பது இவரது பட்டப்பெயராகும்.


1945ம் ஆண்டில் தனது 10வது வயதில் "சிறீமுருகன்" என்ற மேடை நாடகத்தில் முதன்முதலாக நடித்து அதனை தொடர்ந்து "குணம் குன்றினால்", "சீதனம்", "அடிப்பேன் பல்லுடைய" போன்ற மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவரது "சோக்கல்லோ நகைச்சுவைகதம்பம்" புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும்.குழந்தை சண்முகலிங்கத்தின் "எந்தையும் தாயும்", மஹாகவி உருத்திரமூர்த்தியின் "கோடை", "பிறந்தமண்" ஆகிய நாடகங்கள் இவருக்கு மேலும்  புகழ் சேர்த்தன.




மக்கள் கலைஞன்”, சமாதான நட்சத்திரம்”, “தேசத்தின் கண்”, “கலாபூஷணம்”, “கலைச்சித்தர்” போன்ற கௌரவங்களை இவர் பெற்றுள்ளார். "எந்தையும் தாயும்'" நாடகத்தில் இவரது நடிப்பிக்காக இலங்கைக் கலைக்கழகத்தின் சிறந்த நடிகருக்கான 2007ஆம் ஆண்டு விருது இவருக்குக் கிடைத்தது. உலக சாதனைக்காக ஏழு மணி நாற்பது நிமிடமாக குறிப்புகள் எதுவுமின்றி “நானும் தமிழும்” என்ற மகுடத்தில் தொடர்ந்து பேசியவர். மேலும் . தெய்வம் தந்த வீடு , பொன்மணி போன்ற சில இலங்கைத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.



https://www.facebook.com/share/v/19Wc8BHiBm/

ஈழத்து கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் நவவிழா கொண்டாட்டம் கலாபூஷணம் சோக்கல்லோ சண்முகநாதனின் நவவிழா கடந்த முதலாம் திகதி கனடாவில்  இடம்பெற்றது. கனடாவில் உள்ள ஏழாலை நலன்விரும்பிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கலாபூஷணம் சொக்கல்லோ சண்முகம் குடை பிடிக்கப்பட்டு கொடிச்சீலைகள் உள்ளிட்டவற்றுடன் பக்திபூர்வமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு வாழ்த்துரையும் வரவேற்புரையும் ஏற்பாட்டுக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து அவரது உறவினர்களும் நலன்விரும்பிகளும் அவரைப் பாராட்டி கவிதைத் தொகுப்புக்களை வழங்கினர். நிகழ்வின் இடையில் அவரை வாழ்த்தும் முகமாக இசை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இறுதியாக அவரது வெற்றிகளை வாழ்த்தி வாழ்த்துமடல்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் ஏழாலையை பிறப்பிடமாகக் கொண்ட சோக்கல்லோ சண்முகநாதன் மேடை நாடகம், வில்லுப்பாட்டு என பல்துறை கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். “சோக்கல்லோ" என்பது இவரது பட்டப்பெயராகும்.1945ம் ஆண்டில் தனது 10வது வயதில் "சிறீமுருகன்" என்ற மேடை நாடகத்தில் முதன்முதலாக நடித்து அதனை தொடர்ந்து "குணம் குன்றினால்", "சீதனம்", "அடிப்பேன் பல்லுடைய" போன்ற மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவரது "சோக்கல்லோ நகைச்சுவைகதம்பம்" புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும்.குழந்தை சண்முகலிங்கத்தின் "எந்தையும் தாயும்", மஹாகவி உருத்திரமூர்த்தியின் "கோடை", "பிறந்தமண்" ஆகிய நாடகங்கள் இவருக்கு மேலும்  புகழ் சேர்த்தன.மக்கள் கலைஞன்”, சமாதான நட்சத்திரம்”, “தேசத்தின் கண்”, “கலாபூஷணம்”, “கலைச்சித்தர்” போன்ற கௌரவங்களை இவர் பெற்றுள்ளார். "எந்தையும் தாயும்'" நாடகத்தில் இவரது நடிப்பிக்காக இலங்கைக் கலைக்கழகத்தின் சிறந்த நடிகருக்கான 2007ஆம் ஆண்டு விருது இவருக்குக் கிடைத்தது. உலக சாதனைக்காக ஏழு மணி நாற்பது நிமிடமாக குறிப்புகள் எதுவுமின்றி “நானும் தமிழும்” என்ற மகுடத்தில் தொடர்ந்து பேசியவர். மேலும் . தெய்வம் தந்த வீடு , பொன்மணி போன்ற சில இலங்கைத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.https://www.facebook.com/share/v/19Wc8BHiBm/

Advertisement

Advertisement

Advertisement