இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரக்கிளையின் ஒழுங்குபடுத்தலில் வட்டார பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சாஸ்திரி கூழாங்குளத்தில் இடம்பெற்றது.
சாஸ்திரிகூழாங்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின் தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவரும் மேளதாள வாத்திய இசை வரவேற்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு கௌரவிப்பு நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கெளரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன், கெளரவ உறுப்பினர்களான மகாதேவா ரவீந்திரன், திருமதி.பத்திமா கெபிரியல், திருமதி.தர்சினி கேதீஸ்வரன் ஆகியோரும் நிகழ்வில் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள், வட்டார பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப்பலரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு கெளரவிப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரக்கிளையின் ஒழுங்குபடுத்தலில் வட்டார பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சாஸ்திரி கூழாங்குளத்தில் இடம்பெற்றது.சாஸ்திரிகூழாங்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின் தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவரும் மேளதாள வாத்திய இசை வரவேற்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு கௌரவிப்பு நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது.இதன்போது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கெளரவிக்கப்பட்டார். தொடர்ந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன், கெளரவ உறுப்பினர்களான மகாதேவா ரவீந்திரன், திருமதி.பத்திமா கெபிரியல், திருமதி.தர்சினி கேதீஸ்வரன் ஆகியோரும் நிகழ்வில் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள், வட்டார பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப்பலரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.