சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் இன்று பிறப்பித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான சட்டமாநாடு இன்று மதியம் மூதூர் நீதிமன்றில் நீதிபதி திருமதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இடம்பெற்றது.
குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம், தேசிய கன்னிவெடி அகற்றல் சபையின் உத்தியோகத்தர்கள், MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், குறித்த பிரதேச காணி உத்தியோகத்தர், குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது குறித்த வழக்கு தொடர்பான ஆலோசனைகள் மாவட்ட நீதிபதியினால் ஒவ்வொருவரிடமும் கேட்டறியப்பட்டது.
இதன்போது குறித்த காணி தொடர்பாக பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் வினவப்பட்டபோது குறித்த காணி அரச காணி எனவும் குறித்த பகுதி மயானமாக பாவிக்கப்பட்டமைக்கான எந்தவித ஆவணங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியபோது, குறித்த எச்சங்கள் மனிதனுக்குரிய எச்சங்கள் எனவும் அவை இயற்கை மரணத்தினூடான இடம்பெற்ற எச்சங்களா அல்லது குற்றத்தினூடாக புதைக்கப்பட்ட எச்சங்களா என்பது தொடர்பில் தங்களால் கூற முடியாது எனவும் ஆனால் அவை மூன்று மனிதர்களுடைய எச்சங்கள் எனவும் ஒன்று 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஆணினுடைய எச்சம் எனவும், மற்றையது 45 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஆணினுடை எச்சம் எனவும் முன்றாவது மனித எச்சம் 25 வயதிற்கு குறைந்த ஆணினுடைய மனித எச்சம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வேறு இரு மனிதர்களுடைய இரு எச்சங்கள் ஒரே இடத்தில் இருந்து கிடைத்ததன் ஊடாக இது இயற்கையான மரணத்தின் ஊடாக புதைக்கப்பட்டது என்ற முடிவுக்கு வர முடியாது எனவும் கூறியிருந்தார்.
அதேபோன்று தேசிய கன்னிவெடிகள் அகற்றும் உத்தியோகத்தர் தெரிவிக்கையில், இனிமேல் இதனை தோண்டுவதாக இருந்தால் அது அபாயகரமாக இருக்கின்ற காரணத்தினால் கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் கிழக்கு மாகாண பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஊடாக மனித வலு கொண்டு குறித்த பிரதேசம் தோண்டப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டவை மனித எச்சம் என்ற காரணத்தினாலும், அவற்றில் பலவகை மனிதர்களுடைய எச்சங்கள் என்ற காரணத்தினாலும், அப்பகுதியில் மயானம் இருந்தமைக்கான சான்றுகள் இல்லாத காரணத்தினாலும் குறித்த பிரதேசத்தினை மீளவும் தோண்டி அது தொடர்பான மேலதிக விசாரணைகளை செய்ய வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மூதூர் நீதிமன்ற நீதிபதி உட்பட அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரதிநிதிகள் கள ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் கடந்த யூலை 30 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியத் திணைக்களம் ஆகியவற்றினால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதை ஆராய்வதற்கான சட்ட மாநாட்டுக்காக இன்றையதினம் (06) நீதிமன்றினால் திகதியிடப்பட்டிருந்தது.
சம்பூரில் மனித எச்சங்கள்: நீதிமன்றம் தோண்ட உத்தரவு சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் இன்று பிறப்பித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான சட்டமாநாடு இன்று மதியம் மூதூர் நீதிமன்றில் நீதிபதி திருமதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம், தேசிய கன்னிவெடி அகற்றல் சபையின் உத்தியோகத்தர்கள், MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், குறித்த பிரதேச காணி உத்தியோகத்தர், குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.இதன்போது குறித்த வழக்கு தொடர்பான ஆலோசனைகள் மாவட்ட நீதிபதியினால் ஒவ்வொருவரிடமும் கேட்டறியப்பட்டது. இதன்போது குறித்த காணி தொடர்பாக பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் வினவப்பட்டபோது குறித்த காணி அரச காணி எனவும் குறித்த பகுதி மயானமாக பாவிக்கப்பட்டமைக்கான எந்தவித ஆவணங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குறித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியபோது, குறித்த எச்சங்கள் மனிதனுக்குரிய எச்சங்கள் எனவும் அவை இயற்கை மரணத்தினூடான இடம்பெற்ற எச்சங்களா அல்லது குற்றத்தினூடாக புதைக்கப்பட்ட எச்சங்களா என்பது தொடர்பில் தங்களால் கூற முடியாது எனவும் ஆனால் அவை மூன்று மனிதர்களுடைய எச்சங்கள் எனவும் ஒன்று 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஆணினுடைய எச்சம் எனவும், மற்றையது 45 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஆணினுடை எச்சம் எனவும் முன்றாவது மனித எச்சம் 25 வயதிற்கு குறைந்த ஆணினுடைய மனித எச்சம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வேறு இரு மனிதர்களுடைய இரு எச்சங்கள் ஒரே இடத்தில் இருந்து கிடைத்ததன் ஊடாக இது இயற்கையான மரணத்தின் ஊடாக புதைக்கப்பட்டது என்ற முடிவுக்கு வர முடியாது எனவும் கூறியிருந்தார். அதேபோன்று தேசிய கன்னிவெடிகள் அகற்றும் உத்தியோகத்தர் தெரிவிக்கையில், இனிமேல் இதனை தோண்டுவதாக இருந்தால் அது அபாயகரமாக இருக்கின்ற காரணத்தினால் கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் கிழக்கு மாகாண பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஊடாக மனித வலு கொண்டு குறித்த பிரதேசம் தோண்டப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார். இதன் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டவை மனித எச்சம் என்ற காரணத்தினாலும், அவற்றில் பலவகை மனிதர்களுடைய எச்சங்கள் என்ற காரணத்தினாலும், அப்பகுதியில் மயானம் இருந்தமைக்கான சான்றுகள் இல்லாத காரணத்தினாலும் குறித்த பிரதேசத்தினை மீளவும் தோண்டி அது தொடர்பான மேலதிக விசாரணைகளை செய்ய வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான கட்டளையை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் 26ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மூதூர் நீதிமன்ற நீதிபதி உட்பட அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரதிநிதிகள் கள ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.இதன் பின்னர் கடந்த யூலை 30 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியத் திணைக்களம் ஆகியவற்றினால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதை ஆராய்வதற்கான சட்ட மாநாட்டுக்காக இன்றையதினம் (06) நீதிமன்றினால் திகதியிடப்பட்டிருந்தது.