புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை இடமாற்றக் கோரி பெற்றோர்களினால் நேற்று (05) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் நிர்வாக சீர்கேடு ஊழல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பாடசாலைக்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, புத்தளம் தெற்கு கோட்டப் பணிப்பாளர் முஹம்மட் நௌசாத் தலைமையில் வருகை தந்த கல்வி அதிகாரிகளினால் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்து பாடசாலையில் உள்ள தகுதியான ஆசிரியர் ஒருவரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழி வழங்கினார்கள்.
அதனையடுத்து குறித்த போராட்டத்தை பெற்றோர்கள் தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் , இந்த போராட்டத்தின் போது பெற்றோரிகளிடமும் கையெழுத்துப் பெறப்பட்டு அதிபரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மகஜர் ஒன்றும் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் போது உடப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இங்கு கடமையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தளத்தில் அதிபரை இடமாற்றக் கோரி பெற்றோரால் ஆர்ப்பாட்டம் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை இடமாற்றக் கோரி பெற்றோர்களினால் நேற்று (05) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.பாடசாலையின் அதிபர் நிர்வாக சீர்கேடு ஊழல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பாடசாலைக்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, புத்தளம் தெற்கு கோட்டப் பணிப்பாளர் முஹம்மட் நௌசாத் தலைமையில் வருகை தந்த கல்வி அதிகாரிகளினால் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்து பாடசாலையில் உள்ள தகுதியான ஆசிரியர் ஒருவரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழி வழங்கினார்கள். அதனையடுத்து குறித்த போராட்டத்தை பெற்றோர்கள் தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் , இந்த போராட்டத்தின் போது பெற்றோரிகளிடமும் கையெழுத்துப் பெறப்பட்டு அதிபரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மகஜர் ஒன்றும் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் போது உடப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இங்கு கடமையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.