பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய எதிர்க்கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த நேரத்தில் அருண ஜயசேகர கிழக்கு மாகாணத்தின் இராணுவக் கட்டளைத் தளபதியாக செயற்பட்டதால் அவரின் தலையீடு விசாரணைகளை பாதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
அத்துடன், வேறு பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய எதிர்க்கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இந்தப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த நேரத்தில் அருண ஜயசேகர கிழக்கு மாகாணத்தின் இராணுவக் கட்டளைத் தளபதியாக செயற்பட்டதால் அவரின் தலையீடு விசாரணைகளை பாதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.அத்துடன், வேறு பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.