• Aug 06 2025

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்குத் தடை

Chithra / Aug 6th 2025, 11:51 am
image


 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை தயார்படுத்துதல்  தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வழங்க மாணவர்களை ஒன்று திரட்டுதல் ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 எனும் துரித இலக்கம் மற்றும் 0112 784208 அல்லது 0112 784537 இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களை அடைய வேண்டும் என தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது. 

இந்த ஆண்டு, 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.


இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்குத் தடை  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை தயார்படுத்துதல்  தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வழங்க மாணவர்களை ஒன்று திரட்டுதல் ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 எனும் துரித இலக்கம் மற்றும் 0112 784208 அல்லது 0112 784537 இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களை அடைய வேண்டும் என தெரிவித்தார்.2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இந்த ஆண்டு, 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement