• Aug 06 2025

நோயாளர்களுடன் பயணித்த அமெரிக்கா விமானம்; ஓடுதளத்தில் விபத்திற்குள்ளாகி 4 பேர் சம்பவ இடத்தில் பலி!

shanuja / Aug 6th 2025, 12:46 pm
image

தரையிறங்க முயன்ற விமானமொன்று ஓடுதளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயணித்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 


குறித்த விமானம் சின்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது விமானத்திலிருந்த 2 விமானிகள் மற்றும் 2 மருத்துவ ஊழியர்கள் சம்பவத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விமான விபத்துத் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.                                            அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையிலேயே நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.


விபத்து தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோயாளர்களுடன் பயணித்த அமெரிக்கா விமானம்; ஓடுதளத்தில் விபத்திற்குள்ளாகி 4 பேர் சம்பவ இடத்தில் பலி தரையிறங்க முயன்ற விமானமொன்று ஓடுதளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயணித்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் சின்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது விமானத்திலிருந்த 2 விமானிகள் மற்றும் 2 மருத்துவ ஊழியர்கள் சம்பவத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விமான விபத்துத் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.                                            அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையிலேயே நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்து தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement