மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் உள்ள வீட்டின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஜந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பகுதியில் பெய்த கனமழை காரணமாக, வீடொன்றின் மீது பாரிய மண் மேடு சரிந்து வீழ்ந்த நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீதே மற்றொரு மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
பின்னர், மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களின் உதவியுடன், பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென இடிந்து விழுந்த மண்மேடு; மண்ணுக்குள் புதைந்துபோன ஐவர் மீட்பு மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் உள்ள வீட்டின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஜந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று மதியம் 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பகுதியில் பெய்த கனமழை காரணமாக, வீடொன்றின் மீது பாரிய மண் மேடு சரிந்து வீழ்ந்த நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீதே மற்றொரு மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.பின்னர், மஸ்கெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களின் உதவியுடன், பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.