• Aug 06 2025

“அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள்” -ஓகஸ்ட் 9 இல் ஆரம்பமாகும் சைக்கிள் ஓட்டம்!

shanuja / Aug 6th 2025, 3:05 pm
image

பாசிக்குடா முதல் பொத்துவில் வரை 'அனைவருக்கும் பாதுகாப்பான வீதிகள்' எனும் தொனிப்பொருளில் சைக்கிள் சவால் சைக்கிள் ஓட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி காலை 6:00 மணிக்கு ஆரம்பமாகும் என ரைடர்ஸ் ஹப் சைக்கிள் ஓட்டுதல் கழகம் அறிவித்துள்ளது.



பாசிக்குடா முதல் பொத்துவில் வரை சைக்கிள் சவால் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை(5) அம்பாறை - மருதமுனை பகுதியில் ரைடர்ஸ் ஹப் சைக்கிள் ஓட்டுதல் கழக ஏற்பாட்டில் நடைபெற்றது.


அங்கு கருத்து தெரிவித்த மருதமுனை ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகத்தின் தலைவர் கலீல் கபூர் தெரிவிக்கையில்,


ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் நடைபெறவுள்ள குறி்த்த சைக்கிள் சவால் போட்டியானது பாசிக்குடா முதல் பொத்துவில் வரையிலான P2P சைக்கிள் ஓட்டப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி இடம்பெற உள்ளது. பாசிக்குடாவில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி பொத்துவில் அறுகம்பை வரை செல்லவுள்ளது.


இப்போட்டியில் யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம் உட்பட இலங்கையின் சகல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சைக்கிள் ஓடுபவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.


பாசிக்குடா முதல் பொத்துவில் வரையிலான 159 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இப்போட்டியானது அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.


இது சமூகத்திற்குள் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு ஆகும்.இந்த வகையான நிகழ்ச்சிகள், சமூகத்தின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக மிகவும் அவசியமாக இருக்கின்றன.


ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம், இவ்வாறு ஆண்டுதோறும் நடாத்துவதன் மூலம், சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அன்பும், ஒற்றுமையும், புரிதலும் ஏற்பட வழி கோலுகிறது .எனவே அனைவரும் தங்களது பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் சைக்கிளோட்டிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இதன்போது, குறித்த சைக்கிள் ஓட்டம் சார்பான 'consultant' சர்வதேச தொண்டு நிறுவன தலைவர் கலீல் கபூர், மற்றும் வைத்தியர் ஏ.எஸ். பௌசாட் ஆகியோர் தத்தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


இந்த நிகழ்வில் மருதமுனை ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழக பொருலாளரும் சிரேஷ்ட பொது சுதாதார பொறுப்பதிகாரியுமான எம்.என்.எம்.பைலான் பங்குபற்றலுடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழக உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

“அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள்” -ஓகஸ்ட் 9 இல் ஆரம்பமாகும் சைக்கிள் ஓட்டம் பாசிக்குடா முதல் பொத்துவில் வரை 'அனைவருக்கும் பாதுகாப்பான வீதிகள்' எனும் தொனிப்பொருளில் சைக்கிள் சவால் சைக்கிள் ஓட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி காலை 6:00 மணிக்கு ஆரம்பமாகும் என ரைடர்ஸ் ஹப் சைக்கிள் ஓட்டுதல் கழகம் அறிவித்துள்ளது.பாசிக்குடா முதல் பொத்துவில் வரை சைக்கிள் சவால் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை(5) அம்பாறை - மருதமுனை பகுதியில் ரைடர்ஸ் ஹப் சைக்கிள் ஓட்டுதல் கழக ஏற்பாட்டில் நடைபெற்றது.அங்கு கருத்து தெரிவித்த மருதமுனை ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகத்தின் தலைவர் கலீல் கபூர் தெரிவிக்கையில், ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் நடைபெறவுள்ள குறி்த்த சைக்கிள் சவால் போட்டியானது பாசிக்குடா முதல் பொத்துவில் வரையிலான P2P சைக்கிள் ஓட்டப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி இடம்பெற உள்ளது. பாசிக்குடாவில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி பொத்துவில் அறுகம்பை வரை செல்லவுள்ளது.இப்போட்டியில் யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம் உட்பட இலங்கையின் சகல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சைக்கிள் ஓடுபவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.பாசிக்குடா முதல் பொத்துவில் வரையிலான 159 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இப்போட்டியானது அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. இது சமூகத்திற்குள் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு ஆகும்.இந்த வகையான நிகழ்ச்சிகள், சமூகத்தின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக மிகவும் அவசியமாக இருக்கின்றன. ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம், இவ்வாறு ஆண்டுதோறும் நடாத்துவதன் மூலம், சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அன்பும், ஒற்றுமையும், புரிதலும் ஏற்பட வழி கோலுகிறது .எனவே அனைவரும் தங்களது பிரதேசங்களுக்கு ஊடாக பயணிக்கும் சைக்கிளோட்டிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதன்போது, குறித்த சைக்கிள் ஓட்டம் சார்பான 'consultant' சர்வதேச தொண்டு நிறுவன தலைவர் கலீல் கபூர், மற்றும் வைத்தியர் ஏ.எஸ். பௌசாட் ஆகியோர் தத்தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.இந்த நிகழ்வில் மருதமுனை ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழக பொருலாளரும் சிரேஷ்ட பொது சுதாதார பொறுப்பதிகாரியுமான எம்.என்.எம்.பைலான் பங்குபற்றலுடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழக உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement