உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்டதால் பிரதேச சபையிலுள்ள அதிகாரங்களை மத்திய அரசின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்ட வர்த்தமானியை மீளப்பெறுவீர்களா என்று சிறீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான விவாதங்களின் போது நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலகவிடம் கேள்வியெழுப்புகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து பிரதேச சபைகளின் எல்லைகளையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனாலேயே தையிட்டி விகாரை உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்தன. இது போன்று பல பிரச்சினைகள் எழுந்ததற்கு காரணம் உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்டது தான்.
எனவே இது குறித்ததான வர்த்தமானியை உடனே மீளப்பெறுவீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
உள்ளூராட்சி சபை அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசு; வர்த்தமானியை மீளப்பெறுவீர்களா சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்டதால் பிரதேச சபையிலுள்ள அதிகாரங்களை மத்திய அரசின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்ட வர்த்தமானியை மீளப்பெறுவீர்களா என்று சிறீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான விவாதங்களின் போது நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலகவிடம் கேள்வியெழுப்புகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து பிரதேச சபைகளின் எல்லைகளையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே தையிட்டி விகாரை உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்தன. இது போன்று பல பிரச்சினைகள் எழுந்ததற்கு காரணம் உள்ளூராட்சி மன்றங்களை நகர அபிவிருத்தி சபைகளாக வெளிப்படுத்தப்பட்டது தான். எனவே இது குறித்ததான வர்த்தமானியை உடனே மீளப்பெறுவீர்களா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.