மாத்தளை - நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடனை வசூலிக்கச் சென்ற இளைஞன் வெட்டிக் கொலை; இலங்கையில் பயங்கரம் மாத்தளை - நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.