இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்களுக்கான விடை அளிக்கும் நேரத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களில், ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 7 அரசியல்வாதிகளும் அடங்குவதாகப் பிரதமர் கூறியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அதிகரிக்கும் ஊழல்; 6 மாதத்தில் 63 பேர் கைது சுட்டிக்காட்டிய பிரதமர் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்களுக்கான விடை அளிக்கும் நேரத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவித்துள்ளார்.அதற்கமைய, 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களில், ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 7 அரசியல்வாதிகளும் அடங்குவதாகப் பிரதமர் கூறியுள்ளார்.இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.இந்த நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.