ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த 0719090900 இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS - மற்றும் Whatsapp) மற்றும் 021 228 5120 நிலையான தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கரினை பேரூந்துக்களில் ஒட்டும் நிகழ்வு மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களினால் இன்றைய தினம் (06.08.2025) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டது.குறித்த 0719090900 இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS - மற்றும் Whatsapp) மற்றும் 021 228 5120 நிலையான தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கரினை பேரூந்துக்களில் ஒட்டும் நிகழ்வு மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களினால் இன்றைய தினம் (06.08.2025) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.