கனடாவில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இம்முறை மார்க்கம் நகரில் கிள்ளிவளவன் செல்லையா வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
அந்தவகையில், அவரது பிரச்சார நடவடிக்கைகளுக்கான தேர்தல் பணிமனை கனடாவில் மார்க்கம் பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரச்சார ஆரம்ப நிகழ்வு பல மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வேட்பாளரான கிள்ளிவளவன் செல்லையா உரையாற்றுகையில்,
கிள்ளி செல்லையா ஆகிய நான் மார்க்கம் வோட்- 7 பகுதியில் குடிமகனாக கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். இந்த சமுதாயம் என் குடும்பம். என் வாழ்க்கை. என் சேவையின் மூலாதாரம்.
நாங்கள் எதிர்கொள்வது ஒரு முக்கியமான தேர்தல். இன்று எனது பணிமனையை திறந்து வைத்து எனது பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றேன். நாம் இங்கு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் வாகன நெரிசல்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள்.
நான் தேர்தலில் நிற்கும் ஒரே நோக்கம் ஏழை, நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கான நல்ல வசதியான வீடுகள். மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கான தேவைகள் மற்றும் சமூகத் தேவைகள்,பாதுகாப்பான சாலைகள் மற்றும் பசுமைப் பூங்காக்கள், அந்தவகையில் மார்க்கம் நகரை அனைவருக்கும் வசதியான மற்றும் பாதுகாப்பான இணைந்த நகரமாக மாற்றுவது.
2018 ஆம் ஆண்டு தேர்தலில் எனது முதல் முயற்சியில் 1900 க்கும் மேற்பட்ட வாக்குகள் எனக்குக் கிடைத்தன. அது எனக்கு இந்த சமுதாயத்தின் நம்பிக்கையைக் காட்டியது. அந்த நம்பிக்கைக்குப் பதிலளிக்க இந்த முறை நானும் மேலும் உறுதியுடன் உங்கள் ஒவ்வொருவரின் குரலையும் கொண்டே வெற்றிபெற முயன்று கொண்டிருக்கின்றேன்.
உங்கள் வாக்கும் உங்கள் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியமானது. நாம் இணைந்து செயற்பட்டால் மாற்றத்தை உருவாக்க முடியும். மார்க்கத்திற்காக வோட் 7 க்காக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உங்கள் வாக்கு எங்களுக்கே என மேலும் தெரிவித்துள்ளார்.
கனடிய இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ஈழத்தமிழர் கிள்ளி செல்லையா கனடாவில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இம்முறை மார்க்கம் நகரில் கிள்ளிவளவன் செல்லையா வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அந்தவகையில், அவரது பிரச்சார நடவடிக்கைகளுக்கான தேர்தல் பணிமனை கனடாவில் மார்க்கம் பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரச்சார ஆரம்ப நிகழ்வு பல மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வேட்பாளரான கிள்ளிவளவன் செல்லையா உரையாற்றுகையில், கிள்ளி செல்லையா ஆகிய நான் மார்க்கம் வோட்- 7 பகுதியில் குடிமகனாக கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். இந்த சமுதாயம் என் குடும்பம். என் வாழ்க்கை. என் சேவையின் மூலாதாரம். நாங்கள் எதிர்கொள்வது ஒரு முக்கியமான தேர்தல். இன்று எனது பணிமனையை திறந்து வைத்து எனது பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றேன். நாம் இங்கு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் வாகன நெரிசல்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள். நான் தேர்தலில் நிற்கும் ஒரே நோக்கம் ஏழை, நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கான நல்ல வசதியான வீடுகள். மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கான தேவைகள் மற்றும் சமூகத் தேவைகள்,பாதுகாப்பான சாலைகள் மற்றும் பசுமைப் பூங்காக்கள், அந்தவகையில் மார்க்கம் நகரை அனைவருக்கும் வசதியான மற்றும் பாதுகாப்பான இணைந்த நகரமாக மாற்றுவது. 2018 ஆம் ஆண்டு தேர்தலில் எனது முதல் முயற்சியில் 1900 க்கும் மேற்பட்ட வாக்குகள் எனக்குக் கிடைத்தன. அது எனக்கு இந்த சமுதாயத்தின் நம்பிக்கையைக் காட்டியது. அந்த நம்பிக்கைக்குப் பதிலளிக்க இந்த முறை நானும் மேலும் உறுதியுடன் உங்கள் ஒவ்வொருவரின் குரலையும் கொண்டே வெற்றிபெற முயன்று கொண்டிருக்கின்றேன்.உங்கள் வாக்கும் உங்கள் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியமானது. நாம் இணைந்து செயற்பட்டால் மாற்றத்தை உருவாக்க முடியும். மார்க்கத்திற்காக வோட் 7 க்காக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உங்கள் வாக்கு எங்களுக்கே என மேலும் தெரிவித்துள்ளார்.Powered by how to embed a youtube video and sms lån som beviljar alla