இலங்கைக்கான 9 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோரை சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு, ஜோர்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், கொங்கோ குடியரசு மற்றும் கினியா குடியரசு ஆகிய நாடுகளுக்கான புதிய தூதர்கள் மற்றும் புதிய உயர்ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.
புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்த அந்த தூதர்கள், அரசின் பணி ஒழுங்கை பாராட்டினர்.
மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் மறுமலர்ச்சிக்கு முன்பை விட வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உத்தியோகபூர்வ சந்திப்புக்கு வந்திருந்த இராஜதந்திரிகள், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்நாடுகளில் தூதரகங்களை நிறுவுவதற்கும் விருப்பம் தெரிவித்தனர்.
இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சுதந்திர தின விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தூதுவர்களுக்கு அழைப்பு இலங்கைக்கான 9 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோரை சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு, ஜோர்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், கொங்கோ குடியரசு மற்றும் கினியா குடியரசு ஆகிய நாடுகளுக்கான புதிய தூதர்கள் மற்றும் புதிய உயர்ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர். புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்த அந்த தூதர்கள், அரசின் பணி ஒழுங்கை பாராட்டினர். மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் மறுமலர்ச்சிக்கு முன்பை விட வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.உத்தியோகபூர்வ சந்திப்புக்கு வந்திருந்த இராஜதந்திரிகள், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்நாடுகளில் தூதரகங்களை நிறுவுவதற்கும் விருப்பம் தெரிவித்தனர். இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.