• Jan 01 2025

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசா - வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

Chithra / Dec 29th 2024, 12:03 pm
image

 

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை - இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையிலுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இலங்கை பிரஜைகளுக்கும் இலவச விசா வழங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசா - வெளிவிவகார அமைச்சு கோரிக்கை  இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை - இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையிலுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையிலேயே இலங்கை பிரஜைகளுக்கும் இலவச விசா வழங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இலங்கையின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement