• Jan 04 2025

இலங்கையில் முக்கிய பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை

Chithra / Jan 1st 2025, 11:24 am
image

  

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 4 கிராம் கொக்கெய்ன் மற்றும் 6 கிராம் நிறையுடைய 12 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் குறித்த போதைப்பொருட்களை தபால் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

38 வயதுடைய ஸ்​பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் முக்கிய பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை   போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபரிடம் இருந்து 4 கிராம் கொக்கெய்ன் மற்றும் 6 கிராம் நிறையுடைய 12 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.முதற்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் குறித்த போதைப்பொருட்களை தபால் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.38 வயதுடைய ஸ்​பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement