திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர், ஊழியர்கள் இணைந்து இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபட்டதோடு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்ததோடு, சேவை பெறாது வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
வெள்ள அனர்த்தத்தின் போது வீடுகளுக்கு கூட செல்லாது மக்களுக்காக சேவையாற்றிய எமது உத்தியோகத்தர்களுக்கு எதிராக, சிலரின் தனிப்பட்ட நலனுக்காக கடந்த சனிக்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் செயற்பாட்டுக்கு எதிராக இவ் சுகயீன விடுமுறை போராட்டமும், அமைதி கவனயீர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை வெருகல் பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்களால் கடந்த சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று ஒருவர் ஈச்சிலம்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் செயற்பாட்டுக்கு எதிராக வெருகல் பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டம் திருகோணமலை -வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர், ஊழியர்கள் இணைந்து இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபட்டதோடு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்ததோடு, சேவை பெறாது வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.வெள்ள அனர்த்தத்தின் போது வீடுகளுக்கு கூட செல்லாது மக்களுக்காக சேவையாற்றிய எமது உத்தியோகத்தர்களுக்கு எதிராக, சிலரின் தனிப்பட்ட நலனுக்காக கடந்த சனிக்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் செயற்பாட்டுக்கு எதிராக இவ் சுகயீன விடுமுறை போராட்டமும், அமைதி கவனயீர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது.அதேவேளை வெருகல் பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களால் கடந்த சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று ஒருவர் ஈச்சிலம்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.