டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, கிண்ணியா பிரதேசத்தில் நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 22 பாடசாலைகளில் இந்த விஷேட சுத்திகரிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்றைய டெங்கு சோதனையின் போது, நகரிலுள்ள பிரதான ஐந்து பாடசாலைகளில் நுளம்பு குடம்பிகள் உருவாகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து, குறித்த பாடசாலைகளில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகை விசிறும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
கிண்ணியா பாடசாலைகளில் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, கிண்ணியா பிரதேசத்தில் நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 22 பாடசாலைகளில் இந்த விஷேட சுத்திகரிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இன்றைய டெங்கு சோதனையின் போது, நகரிலுள்ள பிரதான ஐந்து பாடசாலைகளில் நுளம்பு குடம்பிகள் உருவாகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன.இதனையடுத்து, குறித்த பாடசாலைகளில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகை விசிறும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.